கோவையில் வீடு கட்டி தருவதாக பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

published 2 years ago

கோவையில் வீடு கட்டி தருவதாக பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவர் சமூக வலைதளத்தில் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (35) என்பவர் குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக பதிவேற்றம் செய்த விளம்பரத்தை நம்பி, அவரை தொடர்பு கொண்டு தனக்கு வீடு கட்டித் தரும்படி கூறினார்.

அதன் பிறகு முன்பண தொகையாக  ஒரு குறிப்பிட்ட தொகையை உதயகுமாரின் வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து உதயகுமார்  செட்டிபாளையத்தில் உள்ள ஆஷா என்பவருக்கு  சொந்தமான காலி இடத்தில் வீடு கட்டித் தருவதற்கான முதற்கட்ட வேலைகளை  மட்டும் செய்துவிட்டு, வீட்டை கட்டி முடிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது சம்மந்தமாக ஆஷா கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் இவ்வழக்கில் தொடர்புடையவரை கைது செய்யும் பொருட்டு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், உத்தரவின் பேரில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்ததில் தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் பொள்ளாச்சி, கோமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இதேபோல் வீடு கட்டி தருவதாக  ரூ.40 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது, மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவையில் சில்க் மார்க் தரத்துடன் கிடைக்கும் பட்டு சேலைகள்.. எங்கே..? என்னென்ன? முழு விவரங்களுக்கு இந்த வீடியோவை காணலாம்…  https://www.youtube.com/watch?v=JXCpOWGJmLE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe