திறமையான மாணவர்களை பொறியியல் படிக்க வைக்க ரெடி...! - சொலிடன் நிறுவனத்தினர் அசத்தல்

published 2 years ago

திறமையான மாணவர்களை பொறியியல் படிக்க வைக்க ரெடி...! - சொலிடன் நிறுவனத்தினர் அசத்தல்

கோவை: தங்களது  நிறுவனத்தின் 25வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக கோவையை சேர்ந்த திறமையான மாணவர்களை பொறியியல் படிக்க வைக்க தயாராக இருப்பதாக சொலிடன் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மருத்துவ உபகரணங்கள், மற்றும் உற்பத்தி தொழில்களுக்கான மென்பொருள் துறை நிறுவனம் சொலிடன். கோவையை சேர்ந்த இந்த நிறுவனம் 25வது ஆண்டு விழா வை கொண்டாடுகிறது. இதனிடையே கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் இந்த நிறுவனத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சொலிடன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணேஷ் தேவராஜ், மற்றும் செயல் அலுவலர் மேகலா தேவராஜ் கூறியதாவது:

கோவையை மையமாகக் கொண்ட சொலிடன்  டெக்னாலஜிஸ், செமிகண்டக்டர் என்ற நிறுவனம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உற்பத்தி தொழில்களுக்கான ஆட்டோமேஷன் மென்பொருளில் நிபுணத்துவம் பெற்ற உயிர் தொழில்நுட்ப நிறுவனமாக, தனது 25 வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்கின்றது.

வெள்ளி விழா ஆண்டு நிறைவொட்டி  கல்வி உதவித் தொகையை அறிவிக்கிறோம். புதிய படைப்பாற்றல் மற்றும், சிந்தனைகள் கொண்ட 25 பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள், பொறியியல் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும்  திட்டமிட்டுள்ளோம்.

இந்த உதவி தொகை திட்டத்தின் மூலம் மிகவும் 25 மாணவர்களையும் அதிக உற்பத்தி திறன் கொண்ட பொறியாளர்களாக உருவாக்க முடியும். 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் திறமையான மாணவர்கள் இந்த உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்த விவரங்களுக்கு பின் வரும் மின் அஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். [email protected]

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe