ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

published 2 years ago

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடந்து கொள்ள தவறியதாகவும் தமிழ் இனம் தமிழ் மொழி தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் எனவே ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆளுநரை கண்டித்தும் முற்போக்கு வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தண்டபாணி, அருள்மொழி, மயில்வாகனம், சுந்தரமூர்த்தி, சிவன் ஞானம் ,சிவகாமி தமிழன், ஜோதி குமார், உட்பட  சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு ஆளுநரை கண்டித்தும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதில் பெண் வழக்கறிஞர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் தண்டபாணி கூறுகையில், "கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கலந்து கொண்ட ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடந்து கொள்ள தவறிவிட்டார். அவரது விருப்பம்போல் சனாதனம் பார்ப்பனியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோசமான எடுத்துக்காட்டான நடவடிக்கையை நடத்தி உள்ளார்.

மேலும் கடந்த ஒரு வருடமாகவே அவரது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் எதிரானதாகவே உள்ளது. ஆளுநர் எவ்வளவு பெரிய பிரச்சனையை உருவாக்குகிறார் என பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஆளுநரை கண்டித்தும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது." என்றார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe