சொத்து வரியை 100 சதவீதம்  உயர்த்தக் கோவை மாநகராட்சி ஒப்புதல்

published 2 years ago

சொத்து வரியை 100 சதவீதம்  உயர்த்தக் கோவை மாநகராட்சி ஒப்புதல்

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: கோவை மாநகராட்சியின் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் மாநகராட்சியின் பிரதான அலுவலக கூட்டரங்கில் குழுத் தலைவர் வி. பி. முபசீரா தலைமையில் நடைபெற்றது. 

கோவை மாநகராட்சியில் 600 சதுரடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம், 1200 சதுரடி பரப்பளவு வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1800 சதுரடி வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1800 சதுரடிக்கு அதிகமுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 100 சதவீதம், தொழிற்சாலைகள், சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மற்றும் காலிமனைகளுக்கு 100 சதவீதம் உயர்வு செய்யலாம் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுவின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு, சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் தெரிவித்து, மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், மாநகராட்சி வருவாய் உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe