கோவை புறநகர்ப் பகுதியில் பட்டாசைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த நான்கு பேர் கைது

published 2 years ago

கோவை புறநகர்ப் பகுதியில் பட்டாசைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த நான்கு பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள கடைகளில் பாதுகாப்பற்ற முறையில் ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை காவல்துறையினர் வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 61 பெட்டிகளில் சரவெடி உட்பட பல்வேறு வகை பட்டாசுகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆனைமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பட்டாசைப் பதுக்கி விற்ற வேட்டைகாரன்புதூரைச் சேர்ந்த உதயகுமார் (வயது 47) என்பவரைக் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.57,100 மதிப்புள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று ஆனைமலை காவல்துறையினர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பேன்சி கடையில் சோதனை செய்தனர். அங்கு 64 பெட்டிகளில் ரூ. 26,620 மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தனர். இதனைக் காவல்துறையினர் கைப்பற்றி விற்பனையில் ஈடுபட்ட பேன்சி கடைக்காரர் அண்ணாமலை (51) என்பவரைக் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் படி காரமடையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 55 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தனர்.

ஊட்டி ரோட்டில் உள்ள மளிகைக் கடையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 75 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காரமடையைச் சேர்ந்த குமரேசன் (48) மற்றும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தேவநாத் (52) ஆகியோரை கைது செய்தனர்.

நேற்று ஒரே நாளில் பட்டாசுகளைப் பதுக்கி விற்ற 4 பேரை காவல்துறை கைது செய்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 720 மதிப்புள்ள 255 பட்டாசு பெட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe