எல்லா நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம்: நாளை முதல் துவக்கம்

published 2 years ago

எல்லா நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம்: நாளை முதல் துவக்கம்

கோவை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால், நாளை முதல் அட்டைதாரர்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களை, எந்த நியாயவிலைக்கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம்.

இதற்கு முன்னர் நியாயவிலைக்கடை பொருட்களை, அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடையில் மட்டுமே வாங்க முடியும். இதனால், இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர்.

இதனால், அட்டைதாரர்கள் எந்த இடத்திலும் உள்ள நியாயவிலைக்கடை கடையிலும் பொருட்களை வாங்கும் வசதி துவக்கப்பட்டது. பொங்கலை முன்னிட்டு நியாயவிலைக்கடை கடைகளில், 2.19 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.

பரிசு தொகுப்பும், இம்மாத பொருட்களும், நியாயவிலைக்கடை அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய கடையில் மட்டும் வழங்கப்பட்டன. பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்து விட்டதால், நாளை முதல், அடுத்த மாத உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றை கார்டுதாரர்கள் முகவரிக்கு ஒதுக்கிய கடை மட்டுமின்றி, எந்த நியாயவிலைக்கடை கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe