சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்: பயன்பாட்டைத் தடுக்க தனிப் படை அமைப்பு

published 2 years ago

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்: பயன்பாட்டைத் தடுக்க தனிப் படை அமைப்பு

கோவை: சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் விதிமீறல் தொடர்வதால், தினமும் டன் கணக்கில் சேகரமாகும் குப்பையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களே அதிகம் காணப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு-முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைப் தயாரிப்போருக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம், இரண்டாவது முறை ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை ரூ. 1 லட்சம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களுக்கு, முதல் முறை 10 ஆயிரம், இரண்டாவது 15 ஆயிரம், மூன்றாவது முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கு முதல் முறை ரூ.1,000, இரண்டாவதாக ரூ.2,000, மூன்றாவதாக ரூ.5,000-ம், சிறு வணிக விற்பனையாளர்களுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவதாக ரூ.200, மூன்றாவது முறை ரூ.500 விதிக்க விதி முறை உள்ளது. ஆனாலும் விதிமீறல்கள் தொடர்கின்றன.

இதையடுத்து, மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் கிடங்குகள், கடைகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்து அபராதம் விதிக்க தனிப்படை அமைத்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, பிளாஸ்டிக் நோடல் அலுவலராக சலேத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் தொடர்பான புகார்களை நோடல் அலுவலரின் (94894-57403) செல்போன் எண்ணில், பொதுமக்கள் அளிக்கலாம். தனிப்படையில் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் விதிமீறல்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe