கோவையில் சொத்து வரி செலுத்த நாளை சிறப்பு முகாம் ஏற்பாடு

published 2 years ago

கோவையில் சொத்து வரி செலுத்த நாளை சிறப்பு முகாம் ஏற்பாடு

கோவை: கோவை மாநகராட்சிக்குச் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் செலுத்த, நாளை (4-ஆம் தேதி) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்:
கிழக்கு மண்டலம் 
56-வது வார்டில் சுங்கம் மைதானம் - ஒண்டிபுதுார் 
8-வது வார்டு நேரு நகர் பேருந்து ஸ்டாப்

மேற்கு மண்டலம் 
35-வது வார்டில் இடையர்பாளையம் தேவாங்க நகர் - கற்பக விநாயகர் கோவில் வளாகம்
40-வது வார்டு வீரகேரளம்- அண்ணா நகர் ஹவுசிங் யூனிட் பகுதி
41-வது வார்டு பி.என்.புதுார், நேதாஜி ரோடு, பட்டத்தரசியம்மன் கோவில் அருகில்

தெற்கு மண்டலம்
85-வது வார்டு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோணவாய்க்கால்பாளையம்
87-வது வார்டு பிரின்ஸ் அவென்யூ -குனியமுத்துார்
90-வது வார்டு சுகாதார அலுவலகம்

வடக்கு மண்டலம் 
19-வது வார்டு மணியகாரன்பாளையம் - அம்மா உணவகம்
25-வது வார்டு அரசு மேல்நிலைப்பள்ளி - காந்தி மாநகர்
28-வது வார்டு காமதேனு நகர் வார்டு அலுவலகம்.மத்திய மண்டலம் 
32-வது வார்டு சிறுவர் பூங்கா, சங்கனுார் நாராயணசாமி வீதி
62-வது வார்டு சாரமேடு மாநகராட்சி ஆரம்பப்புள்ளி
63-வது வார்டு ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம்
80-வது வார்டு மாநகராட்சி ஆரம்பப்புள்ளி, கெம்பட்டி காலனி
84-வது வார்டு ஜி.எம்.நகரில் உள்ள தர்கத் இஸ்லாம் பள்ளி

இந்த சிறப்பு முகாம்கள் தவிர வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை, அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe