உக்கடம் ஆத்துப்பாலம் போக்குவரத்தில் மாற்றம்

published 2 years ago

உக்கடம் ஆத்துப்பாலம் போக்குவரத்தில் மாற்றம்

கோவை: உக்கடம் - ஆத்துப்பாலத்தில் மேம்பாலம் கட்டுமானப் பணி காரணமாக, போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக, கோவை மாநகருக்குள் உக்கடம் நோக்கிச் செல்ல, கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ரோட்டில் இருந்து கோவை மாநகருக்குள் வரும் பைக், கார்கள், ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் நோக்கி வலதுபுறம் திரும்பத் தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாகனங்கள், குனியமுத்துார் ரோட்டில், 500 மீட்டர் சென்று 'யூ டர்ன்' செய்து உக்கடம் நோக்கி செல்லலாம். பாலக்காடு ரோட்டில் வரும் கனரக, சரக்கு வாகனங்கள் சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு, புட்டுவிக்கி ரோட்டில் செல்ல வேண்டும்.

பொள்ளாச்சி ரோட்டில் வரும் கனரக, சரக்கு வாகனங்கள், சுந்தராபுரம் சந்திப்பிலிருந்து வலதுபுறமாகத் திரும்பி, போத்தனுார், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம் ரோடு வழியாகக் கோவை மாநகருக்குள் செல்லலாம்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி ரோடு செல்லும் பைக், கார்கள் வழக்கம் போல் ஆத்துப்பாலம் வழியாகச் செல்லலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe