கோவை - தன்பாத் சிறப்பு ரயில் மார்ச் வரை நீட்டிப்பு

published 2 years ago

கோவை - தன்பாத் சிறப்பு ரயில் மார்ச் வரை நீட்டிப்பு

கோவை - தன்பாத் சிறப்பு ரயில் மார்ச் வரை நீட்டிப்பு
கோவை, பிப். 4: கோவையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு, கடந்த ஜனவரி மாதம் பண்டிகை தினங்களையொட்டி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டது. தற்போது, இந்த ரயிலானது மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தன்பாத் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு புறப்படும் தன்பாத் - கோவை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமைகளில் காலை 4 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். 

கோவை நிலையத்தில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 12.50 மணிக்கு புறப்படும் கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வியாழக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு தன்பாத் நிலையத்தைச் சென்றடையும். 

இந்த ரயிலானது, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, விசாகப்பட்டணம், சாம்பல்பூர், ரூர்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, பொகாரோ ஸ்டீல் சிட்டி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe