அருள்மிகு திரு வள்ளியம்மாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது

published 2 years ago

அருள்மிகு திரு வள்ளியம்மாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை: தைப்பூசம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா அருள்மிகு திரு வள்ளியம்மாள் திருக்கோவிலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

கோவை மாவட்டம், வடவள்ளி அருகே உள்ள, மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திரு வள்ளியம்மாள் திருக்கோயில். இன்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வள்ளியம்மாளுக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.

பிறகு அங்கிருந்து சாமி சப்பரத்தில் மேள தாளங்கள் முழங்க மருதமலை பிள்ளையார் கோவிலிலிருந்து புறப்பட்டு மருதமலை அடிவாரம் வரை வீதி உலா வந்தது. இதில் பெண்கள் ஆண்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பக்தர்கள் ஒன்றிணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மேள தாளங்கள் முழங்க இந்த திருக்கல்யாண உற்சவ ஊர்வலம் நடைபெற்றது.

கடைசியாக மதியம் வள்ளியம்மாள் திருமண மண்டபத்தை அடைந்தார். பிறகு மதியம் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சந்திரசேகர் மற்றும் சர்மிளா சந்திரசேகர் தலைமை தாங்கி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து விழாவைச் சிறப்பாகச் செயல்படுத்திய அன்பு என்கிற செந்தில் பிரபு மற்றும் சௌமியா செந்தில் பிரபு ஆகியோர் விழாவுக்கான ஏற்பாட்டினை சிறப்பாகச் செய்திருந்தன.

மேலும் இந்நிகழ்ச்சியில் கேயு ராஜன், திரிவேணி ராஜன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்தோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு இந்த திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe