1500 பேருக்கு உலகம் முழுவதும் நுண் அறுவை சிகிச்சை பயிற்சி அளித்து கோவை கங்கா மருத்துவமனை சாதனை

published 2 years ago

1500 பேருக்கு உலகம் முழுவதும் நுண் அறுவை சிகிச்சை பயிற்சி அளித்து கோவை கங்கா மருத்துவமனை சாதனை

கோவை:

கோவைகங்கா மருத்துவமனையில் உள்ளபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள மைக்ரோ சர்ஜரி லேப், வளர்ந்தநாடுகளானஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள 142 நகரங்கள் உட்பட 68 நாடுகளில் இருந்து 1500 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.


இதுகுறித்துகங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக், கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் எஸ். ராஜ சபாபதிகூறுகையில்:-

 

மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை என்பது 1.0 மிமீ விட்டம் கொண்ட ரத்த நாளங்களை இணைப்பதை உள்ளடக்கியது என்று விளக்கினார்.இதில்1.0மிமீ அளவுள்ளசிறிய ரத்தநாளங்களில்4 முதல் 5 தையல்கள் போட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

இந்த நுண்கலையை கற்பிக்க எங்கள் மருத்துவமனையில் கடந்த 2000–ம்ஆண்டு இந்தமைக்ரோ சர்ஜரி லேப்துவக்கப்பட்டது.இதில்பயிற்சிபெறுபவர்களுக்குஒரு வார காலம், அறுவை சிகிச்சை அரங்கில் உருவகப்படுத்தப்பட்ட நிலையில்பயிற்சிஅளிக்கப்படுகிறதுஎன்றுதெரிவித்தார்.

 

நுண்அறுவை
சிகிச்சைபயிற்சிக்காக
வரும் மருத்துவநிபுணர்களுடன், மருத்துவம் சார்ந்த பல்வேறுவிஷயங்களில்பயிற்சிபெறவும் 70 நாடுகளில் இருந்து மொத்தம் 2800 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இம்மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.


மேலும்
எங்கள் மருத்துவமனை குறுகிய கால மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறது.

 

பல வளரும் நாடுகளில் மக்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் காயங்களால் ஏற்படும் உடல்உறுப்பு பாதிப்பை மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும்உலகம் முழுவதும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில்எங்கள்மருத்துவமனையும்முக்கியபங்குவகிப்பதுஎங்களுக்கு மிகவும்மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் டாக்டர் ராஜ சபாபதி தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe