கோவை வந்த ஸ்டாலினிற்கு பரிசாகக் 'கடுகில் ஸ்டாலின்': படம் உள்ளே...!

published 2 years ago

கோவை வந்த ஸ்டாலினிற்கு பரிசாகக் 'கடுகில் ஸ்டாலின்': படம் உள்ளே...!

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

கோவை: ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்ற பழமொழி ஒரு பக்கம் இருந்தாலும் 0.05 மில்லி கிராம் கொண்ட  கடுகில் ஈரோடு ரயில்வே காலனியைச்  சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஓவியர் ஒரு முழு உருவப்படத்தையே வரைந்துள்ளார் என்பது ஆச்சர்யம். கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஸ்டாலினுக்குப் பரிசாகத் தர இவ்வோவியத்தை உருவாக்கியிருக்கிறார் வெங்கடேஷ். 

 

மேலும் ஸ்டாலினின் வாழ்க்கைக் கதையைச் சுருக்கம் செய்து அந்த கதையினை எழுத்து வடிவங்களில் ஒரு அடி அளவில் வரைந்துள்ளார். இவ்வாரான ஓவியங்கள் வழியே வரலாறு வரைபடும் போது,  காலம் முழுவதும் பேசும் பொருளாக உயிர்ப்பித்து இருக்கும். அந்த வகையில் முதல்வரின் படத்தை ஒரே நாளில் கடுகிலும், வெள்ளைத் தாளிலும் படம் வரைந்து அவருக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் இந்த அற்புத ஓவியர். 

 இது ஒவியக் கலையின் மற்றொரு பரினாமமாக அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை எனக் கூறித், திறமைகளை ஊக்கப்படுத்தும் முதல்வர் ஓவியரின் கைவண்ணத்தை மிகவும் ரசித்துப் பாராட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe