தென்னையின் மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்த மாணவிகள்

published 2 years ago

தென்னையின் மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்த மாணவிகள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா,காரமடை வட்டாரம், மருதூர் ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்குத் தென்னையில் மகசூலை அதிகரிக்க வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் செய்தனர்.

காரமடை வட்டாரத்தில் பாசனப் பயிராக அதிகளவில் தென்னைச் சாகுபடி  செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தென்னையில் நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு காரணமாக பச்சை ஓலைகள் மற்றும் குலைகள் சரிவது, பச்சையம் குறைபாடு, குரும்பை கொட்டுதல், காய்களின் பருப்பு எடை குறைதல், பாளைகளின் எண்ணிக்கை மற்றும் விளைச்சல் குறைதல் போன்றவை ஏற்படுகின்றன.

இதனால் தென்னையின் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்த TNAU தென்னை டானிக்கை வருடத்திற்கு இரு முறை 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.

இதற்கான செயல்முறை விளக்கமானது, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இறுதியாண்டு வேளாண் மாணவிகளான இலக்கியா, நந்தனா, நந்தினி, நீரஜா ராஜன், ரேவதி, சஞ்ஜுனா, சாருலதா, சத்யபாமா மற்றும் ஸ்வர்ணமால்யா ஆகியவர்களால் மருதூர் திரு. தேவராஜ் அவர்களின் தென்னை தோப்பில் நடத்தப்பட்டது. இதில் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe