மருதமலையில் மலை போல் தேங்கிய குப்பைகள்

published 2 years ago

மருதமலையில் மலை போல் தேங்கிய குப்பைகள்

மருதமலை அடிவாரம் முதல் கோவில் வளாகம் வரை சிதறி கிடந்த குப்பை கழிவுகள் நேற்று அகற்றப்பட்டன.

முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், சமீபத்தில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்நிலையில், பக்தர்கள் பலர் சாப்பிட்ட பாக்கு மட்டை தட்டுகள், பிளாஸ்டிக் பிளேட்டுகள், தண்ணீர் 
பாட்டில்கள், டம்ளர், பிஸ்கட், சிப்ஸ் கவர்களை படிகட்டு ஓரத்திலேயே வீசிச் சென்றுள்ளனர். இதனால், 
அடிவாரம் முதல் கோவில் உச்சி வரை படிகட்டுகளின் இரு ஓரங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தன 

மருதமலை கோவில் நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சி பணியாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

 தொடர்ந்து, சேகரிக்கப்பட்ட கழிவுகளை மூட்டை மூட்டையாக குப்பை குப்பை வாகனங்களில் கொண்டு சென்றனர். கழிவுகள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த துாய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe