ஆர்.எஸ்.புரத்தில் பாடி ஜீல் புதிய கிளை துவக்கம்

published 1 year ago

ஆர்.எஸ்.புரத்தில் பாடி ஜீல் புதிய கிளை துவக்கம்

கோவை: 5000த்திற்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட  பாடிஜீல் பிட் ஒர்க்ஸ் உடற்பயிற்சி கூடத்தின் புதிய கிளை கோவை ஆர் எஸ் புரத்தை அடுத்த பால் கம்பனி பகுதியில் இன்று துவக்கப்பட்டது.


கோவையில் பிரபலாமான பாடிஜீல் பிட் ஒர்க்ஸ் உடற்பயிற்சி கூடத்தின் புதிய கிளை கோவை ஆர் எஸ் புரம் அடுத்த, பால் கம்பனி அருகே இன்று துவக்கப்பட்டது. பாடி பில்டிங் உலக சாம்பியன் ராஜேந்திரன் மணி, மற்றும் சின்னத்திரை நடிகர் புகழ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்த உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் க்ரிஸ் பீத்தொவன் கூறும் பொழுது:-

தரமான பயிற்சியாளர்களும் உடற்பயிற்சி சாதனங்களும் இந்த கூடத்தில் இருந்தால் தான் எங்களை நாடி வரும் வடிக்கையாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை தரமுடியும் என்பதால் இந்த இரு இடங்களிலும் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்.

உடற்பயிற்சியாளராக சர்வதேச அளவில் தரசான்றிதழ் கொண்டவர்களை மட்டுமே நாங்கள் பயிற்சியாளர்களாக நியமனம் செய்துவருகிறோம். எங்களிடம் இதுபோல 30 சிறப்பான பயிற்சியாளர்கள் உள்ளனர்.

எங்கள் உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்துமே மிக தரமானவை, இவைகள் தாய்வான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை மேலும் நாங்கள் ஒருவர் தான் இப்போது வரை 'டுன்டுரி' எனும் பின்லாந்து நாட்டின் உடபயிற்சி சாதனங்களை தமிழ்நாட்டில் கொண்டுள்ளோம்.

எங்கள் உடற்பயிற்சி கூடமானது இங்கு ஒரு நாளைக்கு 17 மணி நேரம் இயங்கக்கூடிய மிக சில உடற்பயிற்சி கூடங்களில் ஒன்று என்பதில் எங்களுக்கு பெருமை. என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe