கருணாநிதி பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு போட்டிகள் : கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

published 2 years ago

கருணாநிதி பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு போட்டிகள் : கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: வரும் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக, 
மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவித்துள்ளார் 

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது : 

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2021-2022ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

இந்த அறிவிப்பின்படி வரும் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கோவை ராஜவீதியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது.

இந்த பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். 

ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் இருந்து முத்திரையிடப்படும் உறைகளில் அனுப்பப்படும் போட்டிக்கான தலைப்புகள், போட்டியின்போது நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். 

இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. 

போட்டிகள் நடத்தப்பட்ட அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்தப் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe