ஒரு கிலோவிற்கு அதிக மாம்பழங்கள் இருக்கின்றதா...! கோவை மக்களே உஷார்...!

published 2 years ago

ஒரு கிலோவிற்கு அதிக மாம்பழங்கள் இருக்கின்றதா...! கோவை மக்களே உஷார்...!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை : கோடைக் காலத்தில் நமக்குக் கிடைக்கும் தித்திப்பான பழங்களுள் ஒன்று  மாம்பழம். "மாம்பழத்தை விரும்பாதவர் மாநிலத்தில் உண்டோ" என்று கூறும் அளவிற்கு இந்த கனி பெரும்பாலான மக்களுக்குப் பிடித்த பழமாக உள்ளது.

அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, நீலம், கிளி மூக்கு என பல்வேறு ரகங்களில் மாம்பழங்கள் கிடைக்கின்றன. மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

சமீபகாலமாகச் செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் பழமாகவும் மாம்பழம் உள்ளது. மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதாகவும், அப்படிப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் கோவையில் அடுத்தடுத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ரசாயன முறைப்படியோ, கார்பைடு கல் மூலமாகவோ பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலை சுற்றல், அஜீரணம் போன்ற பல இன்னல்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எவ்வாறு கண்டறிவது என்பதைக் காண்போம்.

எடை
பொதுவாக நாம் பழங்களை எடைபோட்டே வாங்குகின்றோம். இவ்வாறு வாங்கும் பொழுது ஒரு கிலோவிற்கு அதிக பழங்கள் இருத்தல், உதாரணமாக ஒரு கிலோவுக்கு 5 மாம்பழங்கள் கிடைக்க வேண்டிய நிலையில் 8 மாம்பழங்கள் கிடைத்தால் அது கூடுதலாகக் கிடைக்கும் மாம்பழங்கள் தானே. அப்படி எடை குறைவாக இருக்கும் மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களாக இருக்கலாம். 
இந்தப் பழங்களை ஒரு வாலி தண்ணீரில் போட்டால் இவை கீழே தங்குவதற்கு பதில் தண்ணீரின் மேற்பகுதியில் மிதக்கும். இதற்குக் காரணம் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் குறைவான நீர்ச்சத்து இருப்பதாகும். ஆதலால் ஒரு பழத்தை அதன் எடையைக் கொண்டே கண்டறியலாம்.

நறுமணம் & நிறம்
பொதுவாக மாம்பழத்தை முகர்ந்து பார்க்கும் பொழுது ஒருவித நறுமணம் வீசும். ஆனால், ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழம் நல்ல நறுமணத்தோடு இருக்காது. மேலும்,  பழத்தின் மேல்பகுதி ஒரே சீர் நிறத்திலிருந்தால் அதுவும் அந்த பழம் இயற்கையாகப் பழுக்காததைக் குறிக்கும். உதாரணமாக மாம்பழம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் கவர்ச்சிகரமாக இருப்பது. இயற்கையான முறையில் பழுக்கும் மாம்பழங்கள் ஒரே சீராகப் பழுக்காது. ஆங்காங்கே பச்சை, வெளிர் மஞ்சள் மற்றும் அடர் மஞ்சள் நிறங்களில் காணப்படலாம்.

முழுமையாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு மாம்பழத்தை வெட்டிப் பார்த்தால் உள்ளே வெளிர் நிறத்தில் இருக்கும். அது நிச்சயம் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த அறிகுறிகளைத் தவிர ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழத்தின் அருகில் ஒரு தீக்குச்சியை ஏற்றினால் அந்த பழம்  நெருப்பு துகள்களை ஏற்படுத்தலாம். இது அரிதான ஒன்று.

கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி இது போன்ற பழங்களைப் பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். இப்படி ரசாயன முறைப்படி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் குறித்து உங்களுக்குத் தகவல் கிடைத்தால் இதனைக் கோவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு  94440 42322 என்ற தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

இந்த விழிப்புணர்வு செய்தியை நம் கோவை மக்களுக்கு பகிர்ந்திடுங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe