கோவையில் அமைய உள்ள செம்மொழி பூங்காவில் இத்தனை சிறப்பம்சங்கள் இடம் பெற போகுங்க...

published 1 year ago

கோவையில் அமைய உள்ள செம்மொழி பூங்காவில் இத்தனை சிறப்பம்சங்கள் இடம் பெற போகுங்க...

கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டினையொட்டி காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. அதன்படி 165 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமையப்பட உள்ளதாகவும் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும் இரண்டாவது கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைக்கப்பட உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக அமையப்படும் செம்மொழி பூங்காவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இயற்கையை பாதுகாத்தல் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு கல்வி ஆராய்ச்சி சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றிற்கு பயன்பெறும் வகையிலும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்கிற்கும் பயன்பெறும் வகையில் 172.21 கோடி மதிப்பில் உலக தரத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செம்மொழி பூங்காவில் வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வண்ணம் குறிஞ்சிவனம், செம்மொழி வனம், மரவனம் ஆகிய வனங்கள் இடம்பெற உள்ளதாகவும் பொதுமக்கள் பூங்காக்களின் வகை மற்றும் அதன் தன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மகரந்த பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகை பூங்காக்கள் கலை நுட்பத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் பூங்கா வளாகத்தில் விசேஷ மண்டபங்கள், உள்அரங்கம், வெளி அரங்கம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறையில், திறந்தவெளி அரங்கம் மற்றும் உடல் பயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகளுடன் அமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகிலேயே இங்கிலாந்தில் உள்ள கியு பூங்கா மட்டுமே தாவர உயிரியல் வங்கியாகவும் அதன் தொடர்புடைய ஆராய்ச்சி மையமாகவும் உள்ளது எனவும் வெப்ப மண்டல நாடான நமது இந்தியாவில் அது போன்ற பூங்கா இதுவரை அமைக்கப்படாத காரணத்தினாலும் இத்தகைய சிறப்புமிக்க செம்மொழிப் பூங்காவை அமைக்க உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe