கோவையில் கொரோனா பரிசோதனை 800-ஐ கடந்தது

published 1 year ago

கோவையில் கொரோனா பரிசோதனை 800-ஐ கடந்தது

கோவை: நாட்டில் 2-வது அலையாக கொரோனா தொற்று பரவிய போது கோவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமானோர் சிகிச்சை பலன் அளிக்காமல் கொரோனாவுக்கு பலியானார்கள்.

அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த சில மாதங்களில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 

இதன் காரணமாக பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 837 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்ற 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழக அளவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் கோவை முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 800-ஐ கடந்துள்ளது. 

இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் அருணா கூறியதாவது:-

"கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றால் கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe