கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல்லுக்கு ஒரு நினைவுச் சின்னம் வேண்டி கோரிக்கை மனு

published 1 year ago

கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல்லுக்கு ஒரு நினைவுச் சின்னம் வேண்டி கோரிக்கை மனு

கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் இடத்தில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழி தான் செம்மொழி என்று அறிவித்த கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று இதில் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் சகாயராஜ் தலைமையில் நிர்வாகிகள் கோவை மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவில் அளித்தனர்.

அவர்கள் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு நல வாரியம் வேண்டுமென பல வருடங்களாக தமிழக அரசுக்கு அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் மூலம், அனைத்து திருச்சபை ஊழியங்களின் சார்பாக பல கோரிக்கைகளை முன்வைத்தோம். தற்போது அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியை தருகின்ற திமுக அரசின் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரலாற்று சாதனை படைக்கும் வண்ணம் அனைத்து மதங்களையும் நேசிக்கும் முதல்வராக, முஸ்லிம் மதத்தினருக்கு உலமாக்கள் நலவாரியம் இருப்பது போல, இந்து கோவில்களில் பூசாரிகளுக்கு நல வாரியம் இருப்பது போல, தற்போது கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்களுக்கும் நல வாரியம் அமைத்து அதற்கான அரசாணையை  வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சருக்கும், சிறுபான்மை துறை அமைச்சருக்கும் கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் கிறிஸ்துவ திருச்சபை ஊழியர்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கிறிஸ்தவரின் நீண்ட நாள் கோரிக்கையான கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் இடத்தில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழி தான் செம்மொழி என்று அறிவித்த கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். இதில் அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe