கோவையில் யானையை துரத்திய நாய்க்குட்டி : மிரண்டு ஓடிய பாகுபலி யானை - வீடியோ..!

published 2 years ago

கோவையில் யானையை துரத்திய நாய்க்குட்டி : மிரண்டு ஓடிய பாகுபலி யானை - வீடியோ..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை : கோவையில் சுற்றுவரும் பாகுபலி யானை ஒரு குட்டி நாயை கண்டு மிரண்டு ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை காட்டு யானை விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த யானையை அப்பகுதி மக்கள் பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் பாகுபலி யானையை 'ஆபரேஷன் பாகுபலி' என்ற திட்டத்தின் மூலம் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி 3 கும்கி யானைகளை வரவழைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நேற்று அதிகாலை தேக்கம்பட்டி அடுத்துள்ள சமயபுரம் கிராமத்திற்குள் புகுந்து உலா வந்தது பாகுபலி யானை.

அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று யானையைக் கண்டு அச்சப்படாமல் குரைத்து விரட்டியது.

இதில் பயந்துபோன பாகுபலி பிளறியபடி ஓடியது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

யானை ஒரு குழந்தையைப்போல என்று வன ஆர்வலர்கள் பலரும் கூறி வரும் நிலையில், ஒரு நாய்க்குட்டியை பார்த்து காட்டுயானை பயந்து  ஓடிய வீடியோ கோவையில் டிரெண்டாகி வருகிறது.

வீடியோ : https://youtu.be/sn5GkwNFo4Q

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe