கோவையில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளால் சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது: போக்குவரத்து துணை ஆணையர் தகவல்

published 1 year ago

கோவையில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளால் சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது: போக்குவரத்து துணை ஆணையர் தகவல்

கோவை: கோவையில் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகளால், விபத்து சாவு எண்ணிக்கை குறைந்துள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கூறினார்.

கோவை நகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"கோவை நகரில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் குறித்து காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த பகுதிகளில் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

அந்த வகையில் பாலக்காடு ரோடு சுகுணாபுரத்தில் இருந்து பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி வரை குறுக்கு சாலை குறுக்கிடும் பகுதிகளில் 140 இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலைகளில் கடந்த ஒரு மாதத்தில் விபத்துகள் நடைபெறவில்லை. 

இதேபோல் சத்தி சாலையிலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்படுகிறது. போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்படாமல், ரவுண்டானா மூலம் சீரான போக்குவரத்துக்கு பல்வேறு இடங்களில் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

சுங்கம் பகுதியில் ரூ.95 லட்சத்தில் ரவுண்டானா பணிகள் விரைவில் முடிவடையும். உக்கடம் அரசு பஸ் டிப்போ அருகில் இருந்து வின்சென்ட் ரோட்டுக்கு செல்லும் பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து காவலர்கள் நிறுத்தாமலேயே சீரான போக்குவரத்து உறுதி செய்யப்படும்.

கடந்த 2022-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விபத்து சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 3 மாதங்களில் கோவையில் 69 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு குறைந்துள்ளது.

இதேபோல் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. குடி போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 10 "பிரீத் அனலைசர்" கருவிகள் மூலம் சோதனைகள் நடத்தப்படுகிறது.

கடந்த 3 மாதங்களில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 1,266 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மேற்கு பகுதியில் 573 வழக்குகள் மற்றும் கிழக்கு பகுதியில் 693 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் மூலம் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe