மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவி பதக்கம் வென்றார்..!

published 1 year ago

மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவி பதக்கம் வென்றார்..!

 

கோவை: தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவி வெள்ளி மற்றும் தங்க பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளார்

கடந்த 28, 29 ஆகிய இரு தேதிகளில் ஹரியானா மோர்னி மலையில் தேசிய அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 18 வயதிற்கு கீழானவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவையை சேர்ந்த 8ம் வகுப்பு ஹாசினி என்ற மாணவி கலந்து கொண்டு வெள்ளை மற்றும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

இவர் கடந்த ஐந்து வருடங்களாக இதற்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் மற்றும் கோயமுத்தூர் சைக்கிள் அசோசியேசன் இவர் இந்த போட்டியில் பங்கேற்க உதவி புரிந்துஉள்ளனர்.

வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் அவரது உறவினர்கள் மற்றும் கோயமுத்தூர் சைக்கிள் உள்ளிட்டோர்ர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஹேலோ இந்தியாவில் தங்க பதக்கமும் வென்றுள்ளதும் பல்வேறு ட்ராக் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe