கோவையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு: மக்கள் வேதனை

published 2 years ago

கோவையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு: மக்கள் வேதனை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: அன்றாட சமையலுக்குத் தேவையான முக்கியமான உணவுப் பொருளாகத் தக்காளி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் பனிக்காலத்தின் போது தக்காளி பூக்கள் கருகியும், உதிர்ந்தும் விடுவதால் அந்த காலகட்டத்தில் விலை அதிகரித்து மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த காலத்தில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் பழத்தின் விலையும், தக்காளியின் விலையும் ஒரே அளவில் இருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்தாண்டு சமூகவலைத்தளங்களில் வைரலானது நினைவிருக்கலாம்.

இதனிடையே மழைக்காலம் தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், கோவையில் தற்போது முதலே தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கோவையில் உள்ள காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் இன்னும் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. 

உணவில் தக்காளி சேர்க்காவிட்டால் சுவையே இருக்காது என்றும், இப்போது வேறு வழி இல்லாமல் புளியைக் கரைத்துத் தான் சமைக்க வேண்டும் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள். 

இதனிடையே, தக்காளி பயிர் நஷ்டத்தை ஏற்படுத்திவிடுவதால் கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தக்காளியைப் பயிரிடாமல் இருந்ததும், வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி இறக்குமதியாவதுமே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து இல்லத்தரசி ஒருவர் கூறியதாவது:-
"தக்காளி இல்லாமல் எந்த ஒரு உணவும் சமைக்க முடியாது. தக்காளியைக் குறைத்துக் கொண்டு சமையல் செய்தால் உணவின் ருசியும் குறைவாகத்தான் இருக்கும். தக்காளி விலை உயர்வுக்குப் பின்னர் தக்காளி  சட்னி, தக்காளி சாப்பாடு ஆகியவை சாப்பிட்டுப் பல வாரங்கள் ஆகிவிட்டது. மொத்த வியாபாரிகளிடம் வாங்கலாம் என நினைத்தால் குறைந்தது 10 கிலோ வாங்குமாறு கூறுகிறார்கள். வீட்டின் அருகே உள்ள கடைகளில் வாங்கச் சென்றால் தக்காளி விலை ரூ.120-க்கு விற்பனை செய்கிறார்கள். எனவே தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.", இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe