“கோவை பட்ஜெட் ஒரு காகித பட்ஜெட்” – ஆதிமுக கவுன்சிலர்கள்

published 1 year ago

“கோவை பட்ஜெட் ஒரு காகித பட்ஜெட்” – ஆதிமுக கவுன்சிலர்கள்
கோவை: கோவை மக்களுக்கு உதவாத வெற்று காகித 'பட்ஜெட்' என, கோஷமிட்டவாறு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நேற்று பட்ஜெட் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மேயர் கல்பனா தலைமையிலும், கமிஷனர் பிரதாப் முன்னிலையிலும், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது காலை, 10 மணிக்கு துவங்கிய கூட்டத்துக்கு, 10 கவுன்சிலர்கள் வரவில்லை. காங், கட்சி கவுன்சிலர்கள் காயத்திரி சரவணக்குமார் அழகுஜெயபால், சங்கர் உள்ளிட்டோர். ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கறுப்பு உடை துண்டு அணிந்து வந்திருந்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் ரமேஷ் ஷர்மிளா ஆகியோர் பட்ஜெட்புத்தகத்தை மேயர் மேஜையில் வைத்துவிட்டுக் கடந்த ஆண்டு அறிவிப்புகள்தான் இதிலும் உள்ளது என கோஷமிட்டபடி வெளியேறினர். பின்னர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில் “கடந்தாண்டு அறிவிப்புகள்தான். இந்தாண்டு பட்ஜெட்டிலும் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, 175 ஏக்கரில் செம்மொழி பூங்கா. ரூ.300 கோடியில் அமைக்கப்படும் என கடந்தாண்டு அறிவித்தனர். இந்தாண்டு அதே செம்மொழி பூங்கா இப்போது 160 ஏக்கரில் அமைக்கப்படும் என்கின்றனர்.. இந்தாண்டு, மக்கள் மீது 100 சதவீத வரியினங்களை திணித்து 100 கோடி வருவாயை அதிகரித்து 16 கோடியாக பற்றாக்குறை காட்டியுள்ளனர். இது மக்களுக்கு உதவாத வெற்று காகித 'பட்ஜெட்' இது" என்றார்.
Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe