கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவை வேண்டும்..!

published 1 year ago

கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவை வேண்டும்..!

கோவை: பெயரளவுக்கு சர்வதேச விமான நிலையமாக செயல்படும் கோவை விமானநிலையத்தை, துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்தி, உண்மையான சர்வதேச விமானநிலையமாக செயல்பட வைக்க வேண்டும் என, சமூக வலைதளங்களில் கோரிக்கை இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையமாக இருந்தபோதும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நகரங்களுக்கு மட்டுமே, சர்வதேச விமான சேவை வழங்கப்படுகிறது.

துபாய்க்கு கோவையில் இருந்து விமான சேவையை துவக்க வேண்டும் என, நீண்டகாலமாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை மத்திய அரசும், விமான போக்குவரத்து ஆணையகமும் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து சமூக வலைதளங்களில், கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவையைத் துவக்குவதற்கான கோரிக்கை இயக்கத்தை, தன்னார்வலர்கள் துவக்கி உள்ளனர்.

அதில், 'கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். இந்தியாவில் 28வது 'பிசி'யான ஏர்போர்ட். ஆனால் கோவையைத் தவிர, அமிர்தசரஸ், லக்னோ, ஜெய்பூர், இந்துார், கோழிக்கோடு, மங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், திருச்சி, கண்ணுார், கோவா உள்ளிட்ட பெரும்பாலான சிறு நகரங்களில் இருந்து, துபாய்க்கு விமானசேவை உள்ளது.

எனவே, சமூக ஊடக வலைதளங்கள் வாயிலாக மக்களே இணைந்து, தொடர் கோரிக்கை இயக்கம் நடத்தினால்தான், விடிவு பிறக்கும். மக்கள் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களை 'டேக்' செய்து பதிவிட வேண்டும்' என, பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் சமூக வலைதள பதிவொன்றில், கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதுகுறித்து பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe