தனி குறுந்தொழில் பேட்டை அமைக்க வலியுறுத்தி டாக்ட் (TACT) சங்கம் மனு

published 2 years ago

தனி குறுந்தொழில் பேட்டை அமைக்க வலியுறுத்தி டாக்ட் (TACT) சங்கம் மனு

 கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/HjISDgAc4xN4oifdJzUxU0

கோவை: கோவையில் தனி குறுந்தொழில் பேட்டை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்து டாக்ட் (தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள்) சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

டாக்ட் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் தலைமையிலான தொழில்துறையினர் செவ்வாய்க்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

"கோவை மாவட்டம் குறு சிறு தொழில்கள் நிறைந்த மாவட்டம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குறு சிறு தொழில்கள் நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 21ம் தேதியன்று கவுண்டம்பாளையம் பகுதி செளடாம்பிகா நகரில், நடைபெற்று வந்த கம்பெனியை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அலுவலர்கள் மூடிவிட்டனர். இது குறித்து அப்போதே மாநகராட்சி ஆணையரைச் சந்திக்க முயன்று போது அவர் இல்லாததால் அவரது தொலைப்பேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினோம். ஆனால் எவ்வித பதிலும் இல்லை. தற்போது தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். எனவே மூடப்பட்ட நிறுவனங்களை உடனடியாக திறக்க வேண்டும். மேலும், கோவையில் தனி குறுந்தொழில் பேட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும்."

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe