வந்தே பாரத் இரயிலில் டிக்கெட்டுகள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்பா- சீக்கிரமா புக் பண்ணுங்கள்.

published 1 year ago

வந்தே பாரத் இரயிலில் டிக்கெட்டுகள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்பா- சீக்கிரமா புக் பண்ணுங்கள்.

கோவை: சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி சென்டிரல் ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதிவேக பயணம், குளிர்சாதன சொகுசு இருக்கைகள் உள்ளதால் இந்த ரயில் சேவைக்குப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 9-ந்தேதி முதல் தெற்கு ரெயில்வேயின் கால அட்டவணையுடன் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 8 பெட்டிகள் உள்ளன.

இதில், 78 இருக்கைகள் கொண்ட 7 பெட்டிகள் சாதாரண வகையாகவும், 50 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டி 360 டிகிரியில் இருக்கைகளைத் திருப்பும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயிலில் 596 பேர் வரையில் பயணம் செய்ய முடியும். சென்னை சென்டிரலில் இருந்து கோவை செல்லும் இந்த அதிவேக ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

இதனால், 5 மணி 50 நிமிடங்களில் பயணிகள் சென்னையில் இருந்து கோவை சென்றடைய முடியும். இந்த ரயிலில் சாதாரண இருக்கைக்கு ரூ.1,365-ம், 360 டிகிரி சிறப்பு இருக்கைக்கு ரூ.2,485-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 1,700 பேர் வரையில் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளதால் இதை16 பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்களும், தொழிலதிபர்களும், ஐ.டி.ஊழியர்களும் ரயில் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை-கோவை விமானச் சேவையை ஒப்பிடும்போது வந்தே பாரத் ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகப் பயணிகள் கருதுகிறார்கள். இதனால், ரயிலில் முன்பதிவு ஒரே நாளில் முடிந்து விடுகிறது. 


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe