கோவையில் இளம் பெண் மது குடிக்க வைத்து பலாத்காரம்: பெண் கர்ப்பமான பின்பு மணம் முடிக்க மறுப்பு

published 1 year ago

கோவையில் இளம் பெண் மது குடிக்க வைத்து பலாத்காரம்: பெண் கர்ப்பமான பின்பு மணம் முடிக்க மறுப்பு

கோவை: கோவையில் திருமணம் செய்ய இருந்த இளம்பெண்ணை மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்த வாலிபர், பெண் கர்ப்பமான பின்பு மண முடிக்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். தனியார் வங்கி உதவி மேலாளர். இவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

2 நாட்கள் முன்பு இளம்பெண்ணை அந்த வாலிபர் காரில் ஆனைகட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது ஒரு ஓட்டலில் வாலிபர் மது அருந்திவிட்டு அந்த இளம்பெண்ணையும் மது குடிக்க வற்புறுத்தியுள்ளார். அவர் குடிக்க மறுக்கவே வலுக்கட்டாயமாக இளம்பெண்ணை மது குடிக்க வைத்துள்ளார். 

பின்னர் இருவரும் போதையில் அங்கிருந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆர். எஸ். புரம் அருகே வந்த போது, அங்குள்ள ஒரு காலி மைதானத்தில் அந்த வாலிபர் காரை நிறுத்தினார். பின்னர் இளம்பெண்ணை காரில் வைத்து உல்லாசத்திற்கு அழைத்தார். முதலில் இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வாலிபரோ, நாம் இருவரும் திருமணம் செய்ய உள்ளோம், திருமணத்திற்கு பிறகு செய்வதை இப்போதே செய்யலாம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் காரில் உல்லாசம் அனுபவித்தனர். அதன்பின்பு அந்த வாலிபர் மாலத்தீவு சென்று விட்டார். தினமும் மணிக்கணக்கில் இருவரும் செல்போனில் பேசி வந்தனர். 

இதற்கிடையே அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதுகுறித்து அந்த வாலிபரிடம் பெண் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால் அவமானம், குடும்ப பெயர் கெட்டு விடும் எனவே பப்பாளி, பைனாப்பிள் சாப்பிட்டு கர்ப்பத்தைக் கலைத்து விடு எனத் தெரிவித்துள்ளார். அதன்படியே அந்த இளம்பெண்ணும் செய்துள்ளார். 

இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால், ரூ.5 லட்சம், 10 பவுன் நகையை தனது தந்தை கேட்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த வாலிபரின் தாயார் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு உன்னை எனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை என கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால், ஏமாற்றமடைந்த இளம்பெண் இது குறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், காவல் துறையினர் இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர், அவரது தந்தை மற்றும் அவரது தாய் ஆகிய 3 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe