"அவள் இல்லாமல் நான் வாழ விரும்பவில்லை.." கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்..!

published 2 years ago

"அவள் இல்லாமல் நான் வாழ விரும்பவில்லை.." கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவையில் காதல் தோல்வியால் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கேசவன்.‌ இவர் மகன் ராஜன் (17).(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

இவர் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.‌

அந்தப்பெண் இவரது காதலை ஏற்கவில்லை.

இந்நிலையில் நேற்று தனது வீட்டில் இருந்த ராஜன்  "என் காதலி என் காதலை ஏற்கவில்லை. அவள் இல்லாமல் இந்த உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை. எனவே நான் தற்கொலை செய்யப் போகிறேன்." என கடிதம் எழுதி வைத்திருந்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பள்ளி மாணவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe