வேகத்தடை தெரியாமல் தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்

published 1 year ago

வேகத்தடை தெரியாமல் தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்

கோவை: கோவை கனுவாய் சாலை, இடையர்பாளையம் மற்றும் வேலாண்டிபாளையம் ஆகிய பகுதி வழியாக தார் சாலையில் பில்லூர் 3 என்ற திட்டத்தின் கீழ் சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. வேலாண்டிபாளையம், புளியமரம், திலகர், கோவில் மேடு உள்ளிட்ட பகுதி வழியில் வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் திலகர் வீதி பள்ளி அருகே அருண்குமார் என்பவர் 8-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை மோட்டார் சைக்கிளில் பள்ளியில் விட சென்று உள்ளார். 

அப்போது திலகர் நகர் பகுதியில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவரது மகள் படுகாயம் அடைந்தார். இதனைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தந்தை-மகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுவதாவது:- 

“இந்த பகுதியில் வேகத்தடை இருப்பது சரியாக தெரிவதில்லை. வெள்ளை பெயிண்ட் அடிக்காததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்தப் பாதையில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது. பல முறை வார்டு உறுப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி இப்பகுதியில் மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe