கோவை அன்னூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பொது நூலகம்

published 1 year ago

கோவை அன்னூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பொது நூலகம்

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பேபாளையம் ஊராட்சியில் பொதுநூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை போடிதிம்மபாளையம், குரும்பபாளையம், செங்காளிபாளையம், குப்பேபாளையம், கணபதிபாளையம், வடுகபாளையம், செம்பாகவுண்டன் புதூர் என 7 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

நூலகக் கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் நூலகத்தின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் நூலகத்தின் சுவர்கள் அனைத்தும் விரிசல் விட்டு மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே வந்து புத்தகங்கள் நனைந்து விடுகின்றன. 

இதனால் புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக இதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று நூலகத்தை மாற்றி விட்டு புதிய நூலகம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe