குளத்து மீனுக்கு வந்தது தீடீர் மவுசு..!

published 1 year ago

குளத்து மீனுக்கு வந்தது தீடீர்  மவுசு..!

கோவை: கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால், கோவையில் குளத்து மீன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கோவையில் உள்ள, 11 குளங்களில் இருந்து தினமும், 2,000 கிலோவுக்கு மேல் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

உக்கடம் பெரிய குளத்தில், 600 கிலோ மீனும், குறிச்சி குளத்தில், 300 கிலோ மீனும் கிடைக்கிறது. கோவை மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

இப்போது கடலில் மீன்கள் இனபெருக்க காலம் என்பதால், மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் கோவை மீன் மார்க்கெட்டுக்கு, கடல் மீன்கள் அதிகம் விற்பனைக்கு வருவதில்லை. அதனால் குளத்து மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுபோக, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில், அணைக்கட்டுகளில் பிடிக்கப்படும் மீன்களும் விற்கப்படுகின்றன.கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் பாலமுருகன் கூறுகையில், ''கோவை குளங்களில், கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை மீன்கள்தான் கிடைக்கின்றன. வெயில் அதிகம் இருப்பதால் பகலில் மீன் பிடிக்க போவதில்லை.

மாலை 6:00 முதல் இரவு 12:00 மணி வரை பிடிக்கிறோம். உக்கடம் குளத்தில் ஒரு நாளைக்கு, 500 முதல் 600 கிலோ வரை கிடைக்கிறது.

கிலோ 60 ரூபாய்க்கு, மீன் மார்கெட்டில் மொத்தமாக விற்கிறோம். கடல் மீன்கள் விற்பனைக்கு வராததால், குளத்து மீன்களை மக்கள் அதிகம் வாங்குகின்றனர்,'' என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe