நேற்று மேட்டுப்பாளையத்தில் பத்தாயிரம் இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் தொழுகை நடத்தி ரமலான் கொண்டாட்டம்

published 1 year ago

நேற்று மேட்டுப்பாளையத்தில் பத்தாயிரம் இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் தொழுகை நடத்தி ரமலான் கொண்டாட்டம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று இப்பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி. ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார். சிறப்பு பயான் உரையை வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி.அப்துல் ஹமீது ஆற்றினார். 

பின்னர் தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். சிறப்புத் தொழுகையினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்த சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe