வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம்: நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

published 1 year ago

வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம்: நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

கோவை: வால்பாறையை அடுத்து சிறுகுன்றா எஸ்டேட் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில பெண்ணை சிறுத்தை தாக்கியது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபரையும் சிறுத்தை தாக்கியது.

அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வடமாநிலத் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் 4 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு காமிராவையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe