கோவை ராம் நகர்ப் பகுதியில் கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சங்கத்தின் 37வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது

published 2 years ago

கோவை ராம் நகர்ப் பகுதியில் கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சங்கத்தின் 37வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: காந்திபுரம் ராம் நகர்ப் பகுதியிலுள்ள தனியார் அரங்கில் கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சங்கத்தின் 37வது அகில இந்திய மாநாடு, நடைபெற்றது.

இந்த மாநாட்டு  நிகழ்ச்சியினை இச்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி, இன்று துவக்கி வைத்தார்.
இச்சங்கத்திந் குழுத் தலைவர் சைய்யது இப்ராகிம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுச் சிறப்பித்தார்,

இந்த மாநாட்டின் வாயிலாக வங்கியிலுள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வங்கித் துறையில் தேவையற்ற சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ரமேஷ் பாபு, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன், தனியார் வங்கி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விஸ்வநாதன், கரூர் வைஸ்யா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரங்கன் மற்றும் ராஜேந்திரன், வெங்கடேசன் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe