கோவையில் வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்வோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

published 1 year ago

கோவையில் வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்வோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆணையர் அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"கோவை மாநகர காவல் துறையினரால் மீட்கப்பட்ட 170 செல்போன்கள் தனிப்படை காவல் துறையினர் இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும். 

இது தவிர பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை தொடர்பாக முக்கியமான குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது 6 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து 56 பவுன் தங்க நகைகள், ரூ.25 லட்சம் பணம், ஒரு இன்னோவா கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பூட்டி இருக்கக் கூடிய வீடுகள் கண்காணிக்கப்படுகின்றன. பொதுமக்கள் ஊர்களுக்கு செல்லும் போது காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். கோவையில் முக்கியமான பகுதிகள், மிகவும் பதட்டமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 

ஆக்டோபஸ் என்கிற புதிய மென் பொருள் கோவை மாநகரில் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கவும், உடனடியாக அடையாளம் காணவும் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது உளவுத்துறை காவல் துறையினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அனுப்புவதற்கு இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. உளவுத்துறை காவலைகளின் வேலைப்பளுவை குறைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் இந்த ஆக்டோபஸ் மென்பொருள் பயன்படுகிறது.

மேலும் இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் மென்பொருளில் சோதனை செய்யப்படும் போது, குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க மிகவும் வசதியாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் வழக்கு சம்பந்தமான தகவல்களை காவல் துறையினர் இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். காவல் நிலையங்கள் இடையே தகவல்கள் பரிமாறி கொள்வதற்கும் இது உபயோகப்படுகிறது.

ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டலைஸ் பண்ணப்படுகிறது. தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின் போது துணை கமிஷனர் சந்தீஸ் உடனிருந்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe