கோவை மாவட்ட சுதேசிய வணிகர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ஆட்சியரிடம் மனு

published 2 years ago

கோவை மாவட்ட சுதேசிய வணிகர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ஆட்சியரிடம் மனு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவை மாவட்ட சுதேசிய வணிகர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவர் லிங்கம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்ட சுதேசிய வணிகர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் பாலித்தீன் கவர்கள் ஒழிப்பு என்ற பெயரில் சிறு வணிகர்கள் மீது அதிகாரிகள் தொடுக்கும் தாக்குதலை நிறுத்த ஆட்சியரிடம் மனு. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அமைப்பின் கோவை மாவட்ட  தலைவர் மாணிக்கம் கூறும் போது:

"வடக்கு மண்டல அதிகாரிகள், சரவணம்பட்டி, கணபதி பகுதிகளில், நடுத்தர வியாபாரிகள் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்டோர் வணிகம் செய்து வருகின்றனர். அந்த கடைகளில் அத்துமீறும் அதிகாரிகள் மக்கும் மற்றும் மக்காத பைகள் இரண்டையும் எடுத்து வருகின்றனர். இதனை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பொருள் என்பது வணிகர்களுக்குத் தெரியும். ஆனால், அதிகாரிகள், கடைகளுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகின்றனர். அரசு தடை விதிக்காத, மக்கும் பைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் எடுத்துச் செல்கின்றனர். இந்தப் போக்கை அதிகாரிகள் நிறுத்த வேண்டும்." என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe