கழிவு பொருட்கள் எல்லாம் கலைப் பொருளாக மாறுது நம்ம கோவையில்

published 1 year ago

கழிவு பொருட்கள் எல்லாம் கலைப் பொருளாக மாறுது நம்ம கோவையில்

வேஸ்ட் டு வெல்த் (Waste to Wealth) என்ற கருத்தின் அடிப்படையில் கோவையில் எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளைக் கொண்டு  கார், டெலிபோன், கிராமஃபோன் உள்ளிட்ட பொருள்களின் பிரம்மாண்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு செல்பி பாயிண்டுகளாக வைக்கப்படவுள்ளன.

கோவை மாவட்டத்தை அழகுற மாற்றும் வகையில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் குளக்கரையில் வித்தியாசமான முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.

மாநகராட்சியின் குப்பைகள் கொட்டப்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும்  பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பிரம்மாண்ட செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட உள்ளன. கார்,டெலிபோன், கிராமபோன், தண்ணீர் பம்ப் உள்ளிட்ட 5 பொருள்களின் பிரம்மாண்ட உருவங்கள் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட 5 டன் கழிவுகளைக் கொண்டு இந்த பிரமாண்ட வடிவங்கள் செய்யப்படுகின்றன. மாநகராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள், பல்வேறு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட கம்ப்யூட்டர் கீபோர்டுகள், மவுஸ், ஹார்டு டிஸ்க் போன்ற எலக்ட்ரானிக் கழிவுகள், தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட இரும்பு கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த பிரம்மாண்ட உருவங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

பொதுமக்களை ஈர்க்கும் வகையிலும், பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருள் கழிவுகள் எவ்வளவு வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe