'எங்கே எனது வேலை?': AIYF அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோவை அணி போராட்டம்

published 2 years ago

'எங்கே எனது வேலை?': AIYF அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோவை அணி போராட்டம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: AIYF -ன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசுப் பணியிடங்களைத் தமிழக இளைஞர்களுக்கே முழுமையாக வழங்கிட வேண்டும், ஒன்றிய மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும், பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்களின் வயது வரம்பு 58 ஆக மாற்ற வேண்டும், தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்ற வேண்டும், தற்காலிக ஒப்பந்த முறையைத் தவிர்த்துப் பணி நியமனங்களை நிரந்தரமாக்க வேண்டும், சிறு குறு தொழில்கள் தொடங்குவதற்கு இளைஞர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ 20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் எனச் சட்டம் இயற்ற வேண்டும், பெண்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் உத்தரவாதப்படுத்தபட வேண்டும், போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலைவாய்ப்புகளைப் பறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. 

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவை மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் AIYF மாநிலத் தலைவர் குணசேகர் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe