முதியோர் இல்லங்களை பதிவு செய்தல் வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்

published 1 year ago

முதியோர் இல்லங்களை பதிவு செய்தல் வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்

கோவை : முதியோர் இல்லங்கள் / ஓய்வுகால முதியோர் இல்லங்கள் முதியோர் வளாகங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பதிவுசெய்தல் வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: மாவட்டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் சேவைநோக்கில் அல்லது வணிக நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் இல்லங்கள், ஓய்வுகாலமுதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள், உதவிவாழும் இல்லங்கள், நோய் தடுப்புபராமரிப்பு இல்லங்கள், நல்வாழ்வுபராமரிப்பு இல்லங்கள், இடைநிலைபராமரிப்பு இல்லங்கள், ஆகியவற்றை  பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பாதுகாப்புசட்டம்-2007- ன் கீழ் மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்யவேண்டும்.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படுத்தப்பட்டுவரும் முதியோர் இல்லங்கள் ஓய்வுகாலமுதியோர் இல்லங்கள் முதியோர் வளாகங்கள் அனைத்தும் உரிய ஆவணங்களுடன் கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe