பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் அழகுக் கலை நிபுணர்

published 2 years ago

பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் அழகுக் கலை நிபுணர்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன்நகர் சுந்தரம் லே - அவுட்டை சேர்ந்தவர்  சக்தி வேல். பால்பாக்கெட் வினியோகஸ்தர். இவருடைய மனைவி சிவசக்தி (வயது 37). இவர் கடந்த 10 ஆண்டுகளாக அழகுக் கலை நிபுணராக வேலை செய்து வந்தார். 

இவர்  ஈரோட் டில் ஒரு திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக பொள்ளாச்சியில் இருந்து ஈரோட்டிற்குச் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ் பொள்ளாச்சியை அடுத்த பல்லடம் மெயின் ரோட்டில் சந்தமநாயக்கன்பாளையத்தில் காலை 6 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

டிரைவர் இருக்கைக்குப் பின்னாலுள்ள இருக்கையில் சிவசக்தி உட்கார்ந்து இருந்தார். அவர் எழுந்து பஸ்சிற்குள் நடக்க முயன்றார். அப்போது திடீரென்று அவர் நிலைதடுமாறிப் படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்ஸில் கதவு இருந்தும் பூட்டாமல் இருந்ததால் தான் சிவசக்தி கீழே விழுந்து இறந்ததாகக் குற்றம்சாட்டி டிரைவர் கன்டக்டருடன் பயணிகள் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe