கோவை மாநகராட்சியில் மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே சான்றிதழ் வழங்கல்: சமூக வலைத்தளத்தில் வைரல்

published 2 years ago

கோவை மாநகராட்சியில் மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே சான்றிதழ் வழங்கல்: சமூக வலைத்தளத்தில் வைரல்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்குத் தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கோவைக்கு பணிக்குச் செல்வோர், கல்லூரி, பள்ளி கல்லூரிக்குச் செல்வோர் எனத் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இந்நிலையில் அன்மையில் மேட்டுப்பாளையம் வந்த ரயில் பயணி ஒருவர் இறப்பு சான்றிதழ் ஒன்றினை மறந்து விட்டு விட்டுச் சென்றுள்ளார். அதனைக் கண்டெடுத்த மற்றொரு பயணி ஒருவர் சான்றிதழை மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக வலைதளங்கள், வாட்ஸ் ஆப் குழுக்களில் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்ட சான்றிதழ் பெரும் விமர்சனத்தைப் பெற்று வைரல் ஆகி வருகிறது. சான்றிதழில் மூதாட்டியின் பெயர் ரங்கம்மாள் எனவும், இறந்த தேதி 18-05-1999 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சான்றிதழ் வழங்கிய தேதி 09-06-1990 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இச்சான்றிதழ் தொடர்பாக இதுவரை புகார் எதுவும் பெறப்படவில்லை. மேலும் சமூக வலைதளத்தில் பரவும் இச்சான்றிதழ் குறித்து உன்மை தன்மை அறியப்படும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe