வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல்.. கோவையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

published 1 year ago

வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல்.. கோவையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : கோவை தமிழகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதிலும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் கமலஹாசன் முன்னிலை வகித்தார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலந்துகொண்டு வருவாய்த் துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும் தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் துறையூர் பச்சைமலை அடிவாரத்தில் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்திய ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் இது போன்ற குற்றச் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவியை பறிக்கவும் வலியுறுத்தப்பட்டன. 

மேலும் தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு வருவாய்த்துறை அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதே போல் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe