வங்கி தேர்வும், வைராக்கிய பிரியாவும்

published 1 year ago

வங்கி தேர்வும், வைராக்கிய பிரியாவும்

பெண்கள் தற்போது பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுனையாக குடும்பம், நண்பர்கள் இருப்பார்கள். 

ஆனால் எந்த ஒரு உதவியும் இல்லாமல் பெண் ஒருவர் தனியாளாகச் சாதிக்க துடித்து வருகிறார். அவரை சந்தித்தபோது நம்மிடம் கூறியதைப் பார்ப்போம்.

என் பெயர் ரசிக பிரியா, நான் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவள். பி.எஸ்., கணிதம் படித்து முடித்து, வங்கி பணியில் சேர்வதற்கு முயற்சி செய்து வந்தேன். தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.

 கிளர்க்காக பணிபுரிய வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் எனது குடும்பத்தினர் பணியில் சேர அனுமதிக்கவில்லை. 

பெண்ணாக இருந்ததால் போராடித் தோற்றுவிட்டேன். எனது லட்சியத்தை அடைய வேண்டும் என முடிவு செய்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாம் என்று கோவைக்கு வந்தேன். இங்கு வாடகைக்கு வீடு எடுத்து வங்கி தேர்வுக்கு படித்து வருகிறேன்.

 பணத் தேவைக்காக உணவு டெலிவரி வேலை செய்து வருகிறேன். காலை, 7 மணிக்கு பணியைத் தொடங்கினால் இரவு, 10 மணி வரை வேலை செய்வேன்.

 சில நாட்கள் இரவு, 1 மணி வரைக்கும் பணிபுரிந்து உள்ளேன். வேலைக்கு இடையில் அவ்வபோது படித்து கொள்வேன்.

 மதிய நேரத்தில் பயிற்சி வகுப்புக்கும் சென்று வருகிறேன். ப்ளீஸ் பெண்களின் லட்சியத்தை தடுக்காதீங்க, என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe