வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது பக்தர் சுருண்டு விழுந்து பலி

published 2 years ago

வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது பக்தர் சுருண்டு விழுந்து பலி

கோவை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம் : https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: வெள்ளியங்கிரி ஆண்டவர் சாமி தரிசனத்திற்க்காக மலையில் நடைபயணம் மேற்கொண்ட பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த பூண்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 7 மலைகளை கடந்து வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது .தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து மலைகளில் நடைபயணம் மேற்கொண்டு தரிசனம் செய்வது வழக்கம் .

அந்த வகையில்  தஞ்சாவூரை சேர்ந்த கரிகாலன் என்பவர் நடை பயணம் மேற்கொள்ளும் போது வெள்ளியங்கிரி இரண்டாவது மலையில் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலயே உரிழந்துள்ளார்.

இதனை அடுத்து சக நண்பர்கள் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . தொடர்ந்து உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe