அடுத்த 5 நாட்களுக்கு கோவை எப்படி இருக்கும்? வேளாண் பல்கலை கணிப்பு..!

published 1 year ago

அடுத்த 5 நாட்களுக்கு கோவை எப்படி இருக்கும்? வேளாண் பல்கலை கணிப்பு..!

கோவை: கோவையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலை தெரிவித்திருப்பது:

கோவை மாவட்டத்தில் இன்று 6 மி.மீ., நாளை 12 மி.மீ., மழையும், 9ம் தேதி 6 மி.மீ., 10 மற்றும் 11ம் தேதி 4 மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்ச வெப்பநிலை, 35 -36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 55 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி, குருவை நெல் நடவினை போதிய வடிகால் வசதியுடன் தொடரலாம்.

நடவு செய்த வயல்களில் மாலை வேளையில், 2 செ.மீ., அளவிற்கு நீர் நிறுத்தி, பின் மறுநாள் காலையில் வடிப்பதனால், நாற்றுகள் மழையின் வேகத்தினால் சேதமாவது தவிர்க்கப்படும்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe