கோவை மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் இடமாற்றம்

published 1 year ago

கோவை மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் இடமாற்றம்

கோவை: கோவை மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர்கள் நிர்வாக நலன் கருதி மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பிறபித்துள்ளார்.

அதன்படி வால்பாறை வருவாய் வட்டாட்சியர் ஜோதிபாசு, பேரூர் சமூகப்பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு நில எடுப்பு அலகு, சிவக்குமார், கலெக்டர் அலுவலக வரவேற்பு பிரிவு தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட வழங்கல் பிரிவு தாராபாய் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக, சிறப்பு நில எடுப்பு அலகிற்கு மாற்றப்பட்டுள்ளார். வால்பாறை சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் அருள் முருகன், வால்பாறை வருவாய் வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe