கோவையில் இன்று இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை

published 1 year ago

கோவையில் இன்று இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை

கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் வாரந்தோறும் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் ஜூன் 8ம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

துணை மின்நிலையம்

கோவை பீளமேடு துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பகுதிகள்

பாரதிகாலனி, பீளமேடு புதூர், சவுரிபாளையம், நன்சுஞ்டாபுரம் சாலை, புலியகுளம், கணபதி, இண்டஸ்டிரியல் எஸ்டேட் ஆவரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி சாலை (ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்

ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது.

இதே போல் கொள்ளிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின் தடை ஏற்பட உள்ளது.

அந்த பகுதிகள் பின் வருமாறு: 

பி.ஜி.புதூர், கொள்ளிபாளையம், கடத்தூர், விண்டெக்ஸ், வையம்பாளையம், புதூர், கள்ளிபாளையம், 

ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது. 

இந்த முன் அறிவிப்புக்கு ஏற்றவாறு பொதுமக்கள் தயாராகிக் கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe